திண்டுக்கல் மாவட்டத்தில் பத்ம விருது பெற விண்ணப்பிக்க வாய்ப்பு

மத்திய அரசு ‘பத்ம விருது” என்ற பெயரில் பத்ம விபூசன், பத்ம பூசன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்குகிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்ம விருது" என்ற பெயரில் பத்ம விபூசன், பத்ம பூசன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்குகிறது.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்த, சாதனை புரிந்தவர்களுக்கு விளையாட்டு துறை சார்பாக பத்ம விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

அதன்படி 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 15.9.2022-ம் தேதிக்குள் உரிய ஆணவங்களுடன் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் விசாகன் ெதரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com