

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. ஒருசில இடங்களில் சுயேட்சைகள் ஆதரவுடன் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை பிடிக்க உள்ளது.
இந்நிலையில் தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான தேர்வு கட்சி தலைமை சார்பில் ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளது. இருந்தபோதும் துணை தலைவர் பதவிகளை பிடிக்க அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சுயேட்சைகள் மத்தியிலும் கடும் போட்டி நிலவி வருகிறது.
கொடைக்கானலில் பொதுவாக வார இறுதி நாட்களில் மட்டுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும். சீசன் காலங்களில் அனைத்து நாட்களும் சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும்.
தற்போது சீசன் இல்லாத காலத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவது சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.