கொடைக்கானலை திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பிரிக்க எதிர்ப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கொடைக்கானலை பிரிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் வர்த்தகர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:&

தமிழகத்தின் நிர்வாக வளர்ச்சிக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரை பழனி மாவட்டமாக அறிவிக்க இருப்பதாக அறிய வருகிறோம். மாவட்டங்களுக்கு இடையே பரப்பளவு குறைய குறைய அந்த மாவட்டங்கள் அனைத்து விதத்திலும் வளர்ச்சியடைவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

இந்த சீரிய முயற்சிக்கு திண்டுக்கல் வர்த்தகர் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். திண்டுக்கல் மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ள ஆன்மீக தலமாகிய பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் புதிதாக உதயமாகும் பழனி மாவட்டத்துக்கு உள்ளடக்கிய தலமாக அமையக்கூடும்.

பழனி மாவட்டமாக அமைக்கும் போது திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்க்கக்கூடிய புகழ்பெற்ற சுற்றுலா தலமாகிய கொடைக்கானலை திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பிரிக்காமல் தற்போது உள்ள நடைமுறைப்படி திண்டுக்கல் மாவட்டத்திலேயே கொடைக்கானல் அமைய ஆவண செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com