சேரன்மகாதேவி விவசாயி கொலையில் நெல்லை கோர்ட்டில் ஒருவர் சரண்

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 38), விவசாயி. கடந்த 28-ந் தேதி இவர் தருவைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.
சேரன்மகாதேவி விவசாயி கொலையில் நெல்லை கோர்ட்டில் ஒருவர் சரண்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 38), விவசாயி. இவர் தற்போது நெல்லை அருகே உள்ள தருவை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 28-ந் தேதி இவர் தருவைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்தது.

இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சேரன்மகாதேவியை சேர்ந்த மாரியம்மாள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணேசன் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த சங்கரலிங்கம்(24) என்பவர் நெல்லை கோர்ட்டில் இன்று சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே கொலையாளிகள் பயன்படுத்திய கார் மானூர் பகுதியில் ரஸ்தாவில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com