விநாயகா் சதுா்த்தியையொட்டி நெய் விலையில் தள்ளுபடி-ஆவின் நிறுவனம் அறிவிப்பு

நெய் விலையில் ரூ.10 தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.சிறப்பு தள்ளுபடி செப்.15 வரை அமலில் இருக்கும்.
விநாயகா் சதுா்த்தியையொட்டி நெய் விலையில் தள்ளுபடி-ஆவின் நிறுவனம் அறிவிப்பு
Published on

சென்னை:

ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஆவின் நிறுவனம் பொதுமக்களின் தேவைகளை பூா்த்திசெய்யும் வகையில் பால், தயிா், நெய், வெண்ணெய், பன்னீா், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் உபபொருள்களையும் ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளா்கள் மூலம் பொதுமக்களுக்கு தங்குதடையுமின்றி விற்பனை செய்துவருகிறது.

இதில் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக பால் உபபொருள்களின் விலைகளில் அவ்வப்போது சிறப்பு தள்ளுபடி செய்வது வழக்கம்.

அந்த வகையில், கிருஷ்ணஜெயந்தி (ஆக.26-ந்தேதி), விநாயகா் சதுா்த்தி (செப்.7-ந்தேதி) உள்ளிட்ட பண்டிகை களை முன்னிட்டு 100 மி.லி. நெய் விலையில் ரூ.10 தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, ரூ.85-க்கு விற்பனையான ஆவின் 100 மி.லி. நெய் விலை ரூ.75-யாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி செப்.15 வரை அமலில் இருக்கும்.

இவ்வாறு ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com