திமுக சார்பில் தாராபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா

ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்வழக்கறிஞர் அணி செயலாளர் செல்வராஜ் மற்றும் நகர கழக வார்டு கவுன்சிலர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திமுக சார்பில் தாராபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா
Published on

தாராபுரம் : 

தாராபுரத்தில் திமுக நகர கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா பழைய நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் பொறியாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

நேற்று மாலை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்இல. பத்மநாபன், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன், கவுன்சிலர்கள் அக்ரோ கமலக்கண்ணன், வின்னர் ஸ்ரீதர், தாராபுரம் நகர அவைத் தலைவர் கதிரவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபாவதி பெரியசாமி, சரஸ்வதி, வழக்கறிஞர் அணி செயலாளர் செல்வராஜ் மற்றும் நகர கழக வார்டு கவுன்சிலர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com