கோத்தகிரியில் மாடியில் இருந்து விழுந்த மூதாட்டி சாவு

ராசாத்தி தனது மகன் ராஜாகண்ணு வீட்டில் வசித்து வந்தார். கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரியில் மாடியில் இருந்து விழுந்த மூதாட்டி சாவு
Published on

கோத்தகிரி

கோத்தகிரி அருகே கொட்டகம்பை பகுதியை சேர்ந்தவர் மல்லன். இவருடைய மனைவி ராசாத்தி (வயது 60). இவர் தனது மகன் ராஜாகண்ணு வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ராசாத்தி வீட்டின் மேல் தளத்தில் காய போட்டிருந்த துணிகளை எடுத்து வருவதற்காக படிகட்டுகளில் ஏறி சென்றார். அப்போது கால் தவறி 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்து உள்ளார். நீண்ட நேரமாகியும் ராசாத்தி வராததால், குடும்பத்தினர் மேலே சென்று பார்த்தனர். அப்போது ராசாத்தி காயமடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராசாத்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com