வடலூரில் வாகனம் மோதி முதியவர் பலி: போலீசார் விசாரணை

சம்பந்தம்( 84) இவர் நேற்று மாலை தருமச்சாலை தெரு அருகே உள்ள மரத்தின் கீழ் தனது மனைவி ஞானம்மாளுடன் அமர்ந்திருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் மீது மோதியது. இதில் சம்பந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் சம்பந்தம் சம்பவ இடத்திலேயே இவர், பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஞானம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
சம்பந்தம்( 84) பலியான முதியவர்.
சம்பந்தம்( 84) பலியான முதியவர்.
Published on

கடலூர்:

வடலூர் ஓ.பி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சம்பந்தம்( 84) இவர் நேற்று மாலை தருமச்சாலை தெரு அருகே உள்ள மரத்தின் கீழ் தனது மனைவி ஞானம்மாளுடன் அமர்ந்திருந்தார்.அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் மீது மோதியது. இதில் சம்பந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஞானம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த ஞானம்மாள் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சமபந்தம மகள் தீபா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com