

விழுப்புரம்:
விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் முகமது சுலைமான் (வயது 68). இவர் நேற்று இரவு தனது பணிகளை முடித்து விட்டு விழுப்புரம்-செஞ்சி சாலையில் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது மசூதி அருகே சென்ற போது, அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. தூக்கிவீசப்பட்ட முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு அதை ஓட்டிவந்த நபர் தப்பியோடி விட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முதியவர் மருத்துவமனையிலேயே இறந்துவிட்டார். இது குறித்து விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.