மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி

காயமடைந்தவரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.வேதாரண்யம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை தெற்கு பகுதியை சேர்ந்தவர் ராமையன் (வயது 82).

இவர் தனது மகன் சுப்பிரமணி யனுடன் (53) மோட்டார் சைக்கிளில் சென்றார்.

வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி தெற்கு யாதவபுரம் பகுதிக்கு சென்ற போது மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்திருந்த ராமையன் மயக்கம் ஏற்பட்டு தவறி கீழே விழுந்து விட்டார்.

இதில் காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி ராமையன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com