கிணற்றில் தவறிவிழுந்து முதியவர் சாவு

கம்பத்தில் பார்வையற்ற முதியவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்கிணற்றில் விழுந்து முதியவர் சாவு
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கம்பம் :

கம்பம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி(82). இவருக்கு கண்பார்வை குறைவாக இருந்ததுடன் உடல்நலக்குறைவும் ஏற்பட்டது.தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று தாகம் எடுத்ததால் தண்ணீர் குடிப்பதற்காக அருகில் உள்ள அறைக்கு சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தோட்டத்து கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மகன் முருகன் கொடுத்த புகாரின்பேரில் கம்பம் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com