

திருப்பூர் :
திருப்பூர், ஊத்துக்குளி ஆர் எஸ் பகுதியை சேர்ந்தவர் சென்னி, இவருடைய மனைவி ராசாள் (55). இவர் சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் அரசு டவுன் பஸ்சில் பயணித்துள்ளார். அப்போது ஊத்துக்குளி பகுதியில் ராசாள் இறங்கிய போது ஓட்டுநர் திடீரென பஸ்சை எடுத்துள்ளார்.
இதனால் ராசாள் கீழே விழுந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர்அவரை சிகிச்சைக்காக ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிந்து அரசு பேருந்து நடத்துனர்கிருஷ்ணமூர்த்தி, ஓட்டுநர் மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்துவிசாரித்து வருகின்றனர்.