திண்டுக்கல் அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி

சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

வடமதுரை:

திண்டுக்கல் அருகே வேடசந்தூர் உசிலம்பட்டியை சேர்ந்தவர் குப்பம்மாள் (வயது 90). அதே பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே குப்பம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எரியோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com