தஞ்சையில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் அண்ணா சிலைக்கு மரியாதை

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணவித்து மரியாைத செலுத்தப்பட்டது.திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன் மற்றும் பலர் கொண்டனர்.
அண்ணா சிலைக்கு ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அண்ணா சிலைக்கு ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Published on

தஞ்சாவூர்:

தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா 114-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டா டப்பட்டு வருகிறது.

அதன்படி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதற்கு கரந்தை பகுதி அ.தி.மு.க. செயலாளர் அறிவுடை நம்பி தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன், ஒன்றிய செயலாளர் துரை. வீரணன், பகுதி செயலாளர்கள் சாமிநாதன், சண்முக பிரபு, நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், பகுதி துணை செயலாளர் சி.ஏ.தாஸ், கவுன்சிலர் சரவணன், விவசாயப் பிரிவு ஒன்றிய செயலாளர் கணேசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com