சத்துணவு அமைப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிறப்பு ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும்.காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு அமைப்பாளர்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு அமைப்பாளர்கள்.
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் வாசுகி தலைமை தாங்கினார்.

அப்போது சிறப்பு பென்ஷன் ரூபாய் 6750 வழங்கிட வேண்டும் அரசுத் துறை காலிப் பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து காலமுறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்துறை சத்துணவு ஊழியர்க ளிடம் வழங்கிட வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கவலை ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com