அன்னூர் அருகே நர்சு தற்கொலை

காவ்யா தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். காதல் தகராறில் தற்கொலை செய்தாரா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அன்னூர் அருகே நர்சு தற்கொலை
Published on

மேட்டுப்பாளையம்,

சிவகங்கை மாவட்ம் நாட்டரசன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் காவ்யா (வயது 24).

இவர் அன்னூர் கோவை சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். பணி காரணமாக அவர் ஆஸ்ப த்திரி குடியிருப்பிலேயே தங்கியிருந்தார்.

இந்தநிலையில் காவ்யா திடீரென ஆஸ்பத்திரியின் பிரசவ வார்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அவர்கள் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து காவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நர்சு காவ்யா தற்கொலை செய்தது ஏன், காதல் தகராறு காரணமாக தற்கொலை செய்தாரா, அல்லது வேறு காரணம் எதுவும் உண்டா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com