

சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி ஆதரவுடன் நிறைவேற்றி இருப்பதை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வரவேற்கிறேன்.
கால தாமதமாக நிறைவேற்றப்பட்டாலும் உடனடியாக அமலுக்கு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழகத்தை பொறுத்த வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே பெண்களுக்கு பல இடங்களில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அதிகாரத்தை கொடுக்கும் பட்சத்தில் தவறுகள் தடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.