நிலக்கோட்டை எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்கப் போவதாக அரசு வெளியிட்ட அறிவி ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.சட்ட மன்றத்தில் மட்டுமல்லாது மக்கள் மன்றத்திலும் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுப்பேன் என எம்.எல்.ஏ. கூறினார்.
நிலக்கோட்டை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய கிராம மக்கள்.
நிலக்கோட்டை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய கிராம மக்கள்.
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே எம்.குரும்பபட்டி, முத்து க்காமன்பட்டி, கருத்தாண்டி பட்டி, சென்னஞ்செட்டி பட்டி உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நிலக்கோட்டை எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகை யிட்டு அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்கப் போவதாக அரசு வெளியிட்ட அறிவி ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

மேலும் தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ.விடம் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும் என கோஷமிட்டனர். சட்ட மன்றத்தில் மட்டுமல்லாது மக்கள் மன்றத்திலும் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுப்பேன் என்றார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். அப்போது நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரெஜினாநாயகம், ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் யாகப்பன், ஆதிதமிழர் மக்கள் கட்சி தலைவர் ராமன் மற்றும் கவுன்சிலர்கள் அங்கி ருந்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com