சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலி

குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் அர்ச்சு ணன்.
சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலி
Published on

கள்ளகுறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் அர்ச்சு ணன் (வயது 75). அதே பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. குடிநீர் வீணாகி செல்வதால் மி்ன்மோட்டரை நிறுத்த அங்கிருந்து சுவிட்ச்சை அணைக்க அர்ச்சுணன் முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய மணி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com