திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் சாவு

வடமதுரை அருகே காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் தீ விபத்தில் புதுப்பெண் இறந்தார்.ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வடமதுரை:

வடமதுரை அருகே கல்குளம் பகுதியை சேர்ந்தவர் துளசிமணி. இவர் செல்போனில் தவறுதலாக வேறு நம்பருக்கு அழைப்பு விடுத்தார். அதில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்த முருகேஸ்வரி(23) என்பவர் பேசியுள்ளார்.

இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் திருமணம் செய்து கொண்டு கல்குளம் பகுதியில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பால்காய்ச்சுவதற்காக முருகேஸ்வரி அடுப்பை பற்றவைத்தார். அப்போது திடீரென அவரது சேலையில் தீப்பற்றி உடல்முழுவதும் பரவியது. வலி தாங்கமுடியாமல் முருகேஸ்வரி சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து முருகேஸ்வரியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குபதிவு செ்யது விசாரித்து வருகிறார். திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ மேல்விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com