புதிய போலியோ தடுப்பூசி நாளை முதல் அமல்

பிறந்தது முதல் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி பணிகள் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெற்று வருகிறது.9 மாதம் நிறைவடைந்த குழந்தைகளுக்கு எப்.ஐ.பி.வி. தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
புதிய போலியோ தடுப்பூசி நாளை முதல் அமல்
Published on

திருப்பூர் :

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் பணிகளில் முக்கிய அங்கமாக தடுப்பூசி பணிகள் நடக்கிறது. தமிழகத்தில் பிறந்தது முதல் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி பணிகள் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெற்று வருகிறது. போலியோ நோயை தடுப்பதற்காக தடுப்பூசி வாய்வழியாக 5 தவணையும், தோல்வழியாக 1½ மாதம் மற்றும் 3½ மாதம் என 2 தவணையாக கொடுக்கப்படுகிறது.

தற்–போது கூடுதலாக தோல் வழியாக செலுத்தப்படும் எப்.ஐ.பி.வி.என்ற போலியோ மருந்து 9 மாத முடிவில் எம்.ஆர். தடுப்பூசி போடும் போது வழங்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகளுக்கு எப்.ஐ.பி.வி. தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நாளை முதல் புதிய போலியோ தடுப்பூசி அமலாகிறது. இதன் மூலமாக போலியோ நோய் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com