கோவையில் புதுமாப்பிள்ளை திடீர் சாவு

சரவணம்பட்டி அருகே உள்ள அம்மன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். முத்துக்குமார் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதற்காக துடியலூர் பகுதிக்கு சென்றார்.
கோவையில் புதுமாப்பிள்ளை திடீர் சாவு
Published on

கோவை:

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 31). இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சுகன்யா(29) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. பின்னர் கணவன்-மனைவி இருவரும் கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அம்மன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். முத்துக்குமார் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

இவர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட செல்வது வழக்கம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென வாந்தி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அல்சர் பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து முத்துக்குமார் அல்சர் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் முத்துக்குமார் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதற்காக துடியலூர் பகுதிக்கு சென்றார். மதியம் 12.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது திடீரென வாந்தி எடுத்து மயங்கினார்.

இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முத்துகுமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற னர்.

அங்கு அவரை பரி சோத னை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முத்துக்குமார் இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

X

Maalai Malar
www.maalaimalar.com