தூத்துக்குடியில் திருமணமான 4 மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை

செல்வகணேஷ் ஏராளமான கடன்கள் வாங்கி வைத்திருந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த செல்வ கணேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடியில்  திருமணமான 4 மாதத்தில்  புது மாப்பிள்ளை தற்கொலை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரை சேர்ந்தவர் செல்வகணேஷ் (வயது 37). வெல்டராக வேலை செய்து வந்தார்.

இவருக்கு தூத்துக்குடி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணி புரியும் பெண்ணுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் செல்வ கணேஷ் ஏராளமான கடன்கள் வாங்கி வைத்தி ருந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த செல்வ கணேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரேம் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com