நெல்லை அருகே திருமணமான 1½ மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை

நெல்லை மாவட்டம் வன்னிகோனேந்தலை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முருகராஜ் ஜே.சி.பி. டிரைவர்.கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
நெல்லை அருகே திருமணமான 1½ மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் வன்னிகோனேந்தலை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முருகராஜ் (வயது29). ஜே.சி.பி. டிரைவர். இவரது மனைவி மணிமேகலை (25).

தூக்குப்போட்டு தற்கொலை

இவர்கள் இரண்டு பேரும் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகராஜ் தூக்குப்போட்ட நிலையில் காணப்பட்டார். அதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக உயரிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இது தொடர்பாக தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவணை முறையில் டிராக்டர் புதிதாக வாங்கி முருகராஜ் ஓட்டி வந்துள்ளார். மேலும் திருமணத்திற்கு கடன் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் கடனை சரிவர கட்டமுடியாமல் தவித்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் கணவருடன் கோபித்து கொண்டு மணிமேகலை தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட முருகராஜ் தற்கொலை செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com