கொன்றைக்காடு அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறைகள்

ரூ. 1 ேகாடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்படுகிறது. கட்டிட பணியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
புதிய வகுப்பறைகள் கட்டும் பணியை  அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதிய வகுப்பறைகள் கட்டும் பணியை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
Published on

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூபாய் 1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய வகுப்பறைகள் கட்டும் பணியை சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் க.அன்பழகன், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன், தவமணி, ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் ராஜலட்சுமி ராஜ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமமூர்த்தி, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) குமரேசன், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா விநாயகமூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் அப்துல் மஜீது மற்றும் கிராம பிரமுகர்கள் மணிகண்டன், மணிவண்ணன், கலியபெருமாள், குட்டியப்பன், குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com