ரூ.59.77 கோடி செலவில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு- அமைச்சர் தா.மோ. அன்பரசன் அடிக்கல் நாட்டினார்

குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பின் ஒருபகுதி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இடிந்தது.அங்கிருந்தவர்கள் வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ரூ.59.77 கோடி செலவில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு- அமைச்சர் தா.மோ. அன்பரசன் அடிக்கல் நாட்டினார்
Published on

திருவொற்றியூர், அருவாகுளம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பின் ஒருபகுதி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இடிந்தது.

இதைத்தொடர்ந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளும் இடிக்கப்பட்டது. அங்கிருந்தவர்கள் வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அந்த பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் தற்போது ரூ59.77 கோடி செலவில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிக்கான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டினார். இதில் மேலாண்மை இயக்குநர் சங்கர், கலாநிதி வீராசாமி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், கே.பி. சங்கர், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, கவுன்சிலர் உமாசரவணன், அவை தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com