நெல்லை பல்கலைக்கழகத்தில் தொலைநெறிக்கல்வி மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு-பதிவாளர் தகவல்

மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற மையங்களில் தற்பொழுது மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நெல்லை பல்கலைக்கழகத்தில் தொலைநெறிக்கல்வி மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு-பதிவாளர் தகவல்
Published on

நெல்லை:

நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவின்தொலைதூரக்கல்விக்குழு அங்கீகாரத்துடன் இளங்கலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், வணிக நிர்வாகவியல், இளநிலை நூலகமும் தகவல் அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும், முதுகலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல், வணிகவியல் மற்றும் முதுநிலை நூலகமும் தகவல் அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும் 2022-2023 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இப்பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கத்தின் நேரடி சேர்க்கை மையங்களான , பல்கலைக்கழக வளாகம், மற்றும் கோவிந்தபேரி, புளியங்குடி, திசையன்விளை, பணகுடி, சங்கரன்கோவில், நாகம்பட்டி ஆகிய ஊர்களில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளிலும், இப்பல்கலைக்கழகத் தொலைநெறி தொடர்கல்வி இயக்கத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் கற்றல் உதவி மையங்களிலும் தற்பொழுது மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி வாயிலாக பயில விரும்பும் விண்ணப்பதாரர்கள் இப்பல்கலைக்கழக இணையதளத்தின் வாயிலாக தாங்களே நேரடியாக விண்ணப்பித்து ஆன்லைன் மூலம் (www.msuniv.ac.in/Distance-Education) சேர்க்கை பெற வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கத்தின் இளநிலை, முதுநிலை, சான்றிதழ், பட்டயப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com