நெல்லை அருகே ரூ.1 லட்சம் கஞ்சாவுடன் வாலிபர் கைது

நெல்லையை அடுத்த ராதாபுரம் பகுதியில் ரூ.1 லட்சம் கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

ராதாபுரம் போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சமத்துவபுரம் பகுதியில் ஒரு வாலிபர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.

அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் இரண்டு கிலோ கஞ்சா இருந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

இதை தொடர்ந்து கஞ்சா வைத்திருந்த ராதாபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (வயது21) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

அவர் எங்கிருந்து கஞ்சாவை கடத்தி வந்தார், வேறு யாருக்கும் கஞ்சாவை விற்பனை செய்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com