

நெல்லை:
பாளை, இலந்தகுளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள் (வயது 37). இவர் கணவரை பிரிந்து, மகளுடன் வசித்து வந்தார். இவரது மகள் முத்துலட்சுமி (வயது 17). இவர் அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக முத்துலட்சுமி ஒழுங்காக படிக்காமல் செல்போனில் விளையாடியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது தாய், முத்துலட்சுமியை கண்டித்தார். நேற்றும் அதுபோல செல்போனில் விளையாடியபோது, அவரது தாய் கிருஷ்ணம்மாள், முத்துலட்சுமியை கண்டித்தார்.
இதில் மனமுடைந்த முத்துலட்சுமி நேற்று அவரது தாய் வேலைக்காக வெளியே சென்றிருந்தபோது, வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மாலையில் வீடு திரும்பிய கிருஷ்ணம்மாள், மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதார்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.