நெல்லை மாநகர புதிய போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு

சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை ஆணையராக பணிபுரிந்து வந்த துரை குமார் நெல்லை மாநகர கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கமிஷனர் துரைகுமார் பொறுப்பேற்று கொண்டபோது எடுத்த படம்.
கமிஷனர் துரைகுமார் பொறுப்பேற்று கொண்டபோது எடுத்த படம்.
Published on

நெல்லை:

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த செந்தாமரை கண்ணன் சென்னையில் உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை ஆணையராக பணிபுரிந்து வந்த துரை குமார் நெல்லை மாநகர கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

அவர் இன்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

சட்டம், ஒழுங்கு சரியாக இருந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். எனவே சட்டம், ஒழுங்குக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய கமிஷனர் துரை குமார் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் 1997-ம் ஆண்டு ஐ.பி.எஸ். முடித்து காவல் பணியில் சேர்ந்துள்ளார்.

வேலூரில் ஏ.எஸ்.பி.யாக பணியை தொடங்கிய இவர் 2006-ம் ஆண்டு போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று கோவையில் பணியாற்றினார்.

அதன்பிறகு திருச்சி, முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட இடங்களில் பணியாற்றிய இவர் கடந்த 2013-ம் ஆண்டு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றார்.

அதன்பிறகு மும்பை சி.பி.ஐ.-யில் பணிபுரிந்த இவர் 2017-ம் ஆண்டு மீண்டும் சென்னையில் பணிக்கு திரும்பினார்.

கடந்த ஆண்டு சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை ஆணையராக பொறுப்பேற்ற அவர் தற்போது ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com