நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு

கனமழை, வெள்ளத்தால் நடைபெற்றுக் கொண்டிருந்த தேர்வு ஒத்திவைப்பு.ஜனவரி முதல் இரண்டு வாரங்களில் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு.
நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு
Published on

வங்கக்கடலில் நிலவிய கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17 மற்றும் 18-ந்தேதி கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் திருநெல்வேலி மாவட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக தாமிரபரணி ஆறு ஓடும் பகுதிகள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்தன.

மழை நின்ற பிறகும் வெள்ளம் வடிய காலதாமதம் ஆனது. இதனால் பள்ளிகளுக்கு ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும்,

6 முதல் 10-ம் வகுப்புகளுக்க ஜனவரி 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 4-ந்தேதி அறிவியல், 6-ந்தேதி கணக்கு தேர்வு, 9-ந்தேதி சமூக அறிவியல் தேர்வு, 10-ந்தேதி உடற்கல்வி தேர்வு நடத்தப்பட இருக்கிறது.

6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்தல் டிசம்பர் 7-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. கனமழை, வெள்ளம் காரணமாக தேர்வு நடந்து கொண்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com