விழுப்புரம் அருகே சூதாடிய கும்பல் கைது

கந்தசாமி தெருவின் அருகே ஒரு கும்பல் சூதாடியது7 பேர் கொண்ட கும்பல் சூதாடியது
விழுப்புரம் அருகே சூதாடிய கும்பல் கைது
Published on

விழுப்புரம்;

விழுப்புரம் பூந்தோட்டம் கந்தசாமி தெருவின் அருகே ஒரு கும்பல் சூதாடியதாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா விற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்படி எஸ்.பி. ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் டி.எஸ்.பி பார்த்திபன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று இரவு சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது சமீர் என்பவரின் வீட்டின் அருகே மோட்டார் சைக்கிள், மற்றும் கார் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது 7 பேர் கொண்ட கும்பல் சூதாடியது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்களை கையும் கலவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.9000 பணம் மற்றும் சீட்டுகட்டுகளை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com