வேப்பனப்பள்ளி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.பணம் வைத்து சூதாடிய மாதேஷ் (26), சிவக்குமார் (25) உள்பட நான்கு பேர் கைது.
வேப்பனப்பள்ளி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
Published on

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்னபத்தலப்பள்ளி கிராமம் சுற்று வட்டார பகுதிகளில் வேப்பனப்பள்ளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் மார்க்கண்டேயன் நதியின் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

விசாரணையில் சின்னபத்தலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது21), குமார் (26), மாதேஷ் (26), சிவக்குமார் (25) ஆகிய நான்கு நபர்களும் அப்பகுதியில் சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீ சார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து ரூபாய் 400 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com