ஊத்தங்கரை அருகே திருமணமான கல்லூரி மாணவி கடத்தப்பட்டதாக கணவர் புகார்

கல்லூரிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வந்த அந்த மாணவி அதன்பிறகுவீடு திரும்பவில்லை.மாணவியின் கணவர் ராமமூர்த்தி போலீசில் புகார் செய்துள்ளார்.
ஊத்தங்கரை அருகே திருமணமான கல்லூரி மாணவி கடத்தப்பட்டதாக கணவர் புகார்
Published on

கிருஷ்ணகிரி,

திருவண்ணாமலை மாவட்டம் இளம்குளி கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. இவர் ஊத்தங்கரையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

கடந்த 27-ந்தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வந்த அந்த மாணவி அதன்பிறகுவீடு திரும்பவில்லை. அவர் குறித்து பல்வேறு இடங்களில்விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 19) என்ற வாலிபர்தான் அந்த மாணவியை கடத்தி சென்றிருக்கலாம் என்று மாணவியின் கணவர் ராமமூர்த்தி போலீசில் புகார் செய்துள்ளார்.அந்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com