திண்டிவனம் அருகே குளிர்பானம் குடித்துவிட்டு பஸ்சில் வந்த சிறுவன் சாவு

நேற்று கோவிலில் இருந்து சென்னைக்கு பஸ்சில் வந்தனர். அப்போது பஸ் மதுரை அருகே வந்தபோது ஒரு தனியார்ஓட்டலில் பஸ்சை நிறுத்தினர்.அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஆண்டனி ஜான் கோசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திண்டிவனம் அருகே குளிர்பானம் குடித்துவிட்டு பஸ்சில் வந்த சிறுவன் சாவு
Published on

விழுப்புரம்:

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். அவரது மகன் ஆண்டனி சாங் கோசன் (வயது 14). அதே பகுதியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று ஆண்டனி சாங் கோசன் தாய் பொற்செல்வி,சகோதரி அனுசியா உடன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு சென்றார். நேற்று கோவிலில் இருந்து சென்னைக்கு பஸ்சில் வந்தனர். அப்போது பஸ் மதுரை அருகே வந்தபோது ஒரு தனியார்ஓட்டலில் பஸ்சை நிறுத்தினர். அந்த ஹோட்டலில் ஆண்டனி ஜான் கோசன் குளிர்பானம் குடித்துள்ளான். குளிர்பானம் குடித்த பின்னர் 4 முறை வாந்தி எடுத்துள்ளான்.

அவரது தாய் பொற்செல்வி பார்த்து பஸ்சில் சென்று வருவதால் இப்படி இருக்கும் என்று நினைத்து பின்னர் மயக்க நிலையில் இருந்த ஆண்டனி ஜான் கோசனை தூங்க வைத்துள்ளனர். பின்னர் பஸ் திண்டிவனம் வந்தது. பொற்செல்வி பஸ்சில் மகன் ஆண்டனிஸ் ஜான் கோசனை எழுப்பினார். ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பொற்செல்வி 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆண்டனி ஜான் கோசனை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஆண்டனி ஜான் கோசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த திண்டி வனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் எந்த காரணத்தினால் இறந்தான் என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com