சூலூர் அருகே விபத்தில் வாலிபர் பலி

இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காரை அங்கேயே நிறுத்தி விட்டு ஒடிவிட்டார்.
சூலூர் அருகே விபத்தில் வாலிபர் பலி
Published on

கோவை,

மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் அறிவழகன்(47). இவர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலை விஷயமாக ேகாவை மாவட்டம் சூலூருக்கு வந்தார்.

பின்னர் வேலை முடிந்ததும் இரவில் சூலூரில் இருந்து திருப்பூருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். மோட்டார் சைக்கிளில் சங்கோதி பாளையம் பிரிவில் சென்ற போது, எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அறிவழகன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காரை ஒட்டி வந்த நபர் காரை அங்கேயே நிறுத்தி விட்டு ஒடிவிட்டார். இதனை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் சூலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த அறிவழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஒடிய டிரைவரை தேடி 

X

Maalai Malar
www.maalaimalar.com