சங்கராபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை-பணம் திருட்டு

சங்கராபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை-பணம் திருடப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீ்ட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
சங்கராபுரம் அருகே  வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை-பணம் திருட்டு
Published on

கள்ளகுறிச்சி:

கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேல்சிறுவளூர் கூட்டுரோட்டை சேர்ந்தவர் ஜானிபாஷா (வயது 54). இவர் வேலுாரில் உள்ள தன் மகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 10 சவரன் நகை, ரூ.20,000 ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. கொள்ளை சம்பவம் பற்றிய தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீ்ட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோ, கதவுகளில் இருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்த ஜானிபாஷா கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் முருகன், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து கொள்ளையடித்த சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com