நல்லம்பள்ளி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கூலி தொழிலாளி பலி

படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். பேருந்தின் பின் சக்கரம் அவர் தலை மீது ஏறியது.சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தேவமூர்த்தி உயிரிழந்தார்.
நல்லம்பள்ளி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி கூலி தொழிலாளி பலி
Published on

நல்லம்பள்ளி,

நார்த்தம்பட்டியை சேர்ந்தவர் தேவமூர்த்தி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நேற்று இரவு லளிகத்திலிருந்து நல்லம்பள்ளி நோக்கி வந்த அரசு நகர பேருந்தில் நார்த்தம்பட்டியில் பஸ்ஸின் பின்பக்கத்தில் ஏறியுள்ளார்.

அப்போது கால் தவறி படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். பேருந்தின் பின் சக்கரம் அவர் தலை மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தேவமூர்த்தி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதியமான் கோட்டை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com