மாரண்டஅள்ளி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி -உடன் சென்றவர் படுகாயம்

எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் தடம் புரண்டு விபத்துக்குள்ளா னது.சம்பவ இடத்திலேயே கார்த்திக் உயிரிழந்தார்.
மாரண்டஅள்ளி அருகே  மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி  -உடன் சென்றவர் படுகாயம்
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகேயுள்ள பனங்காடு முத்து கவுண்டர் தெருவை சேர்ந்தவர் கணேசன்.இவரது மகன் கார்த்திக் (வயது 22). இவரும் இவரது நண்பரான கோணம்பட்டி கோவிந்தராஜ் மகன் விஷால்(23) என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் பள்ளி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் தடம் புரண்டு விபத்துக்குள்ளா னது.

இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.படுகாயம் அடைந்த விஷாலை தருமபுரி அரசு மருத்துவமணியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள னர். இந்த விபத்து குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com