கொளத்தூர் அருகே மது பாட்டில் விற்ற சைக்கிள் கடை உரிமையாளர் கைது

காவேரிபுரம் பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரது சைக்கிள் கடையில் மது பாட்டில் விற்பனை செய்வதாக கொளத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கொளத்தூர் அருகே மது பாட்டில் விற்ற சைக்கிள் கடை உரிமையாளர் கைது
Published on

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள காவேரிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 47). இவர் காவேரிபுரம் பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரது சைக்கிள் கடையில் மது பாட்டில் விற்பனை செய்வதாக கொளத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து கொளத்தூர் போலீசார், கோபால் சைக்கிள் கடையில் சென்று சோதனை செய்ததில், அவர் மறைத்து வைத்து மதுபாட்டில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து 97 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோபாலை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com