காவேரிப்பட்டணம் அருகே கழுத்து அறுத்து பெண் படுகொலை

இன்றுகாலை வீட்டின் அருகில் பழனியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம் அருகே  கழுத்து அறுத்து பெண் படுகொலை
Published on

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ள தேவர்முக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது55). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. ராஜேந்திரன் இறந்துள்ளார்.

இந்த நிலையில் இன்றுகாலை வீட்டின் அருகில் பழனியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் இன்றுகாலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட பழனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனியம்மாளின் சொத்தை தனது 2-வது அக்காவின் பெயரில் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரச்சினை ஏற்பட்டு அவரை கொலை செய்து இருக்கலாம் என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com