காரிமங்கலம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்

கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.வாலிபர் மீது புகார் கொடுக்கப்பட்டது.
காரிமங்கலம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்
Published on

காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கெங்குசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் கமலேசன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களது மகள் அருணா (வயது22).

இவர் காரிமங்கலம் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.காம். படித்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார்.

பின்னர் வெகுநேரம் ஆகியும் மாணவி அருணா வீடு திரும்பவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் அவரை தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து மாணவியின் பெற்றோர் காரிமங்கலம் போலீசில் எனது மகளை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் கொட்டாவூரைச் சேர்ந்த வேலாயுதம் மகன் பொன்னுவேல் என்பவர் கடத்திச் சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com