

தருமபுரி,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே யுள்ள தேவர்முக்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் லட்சுமணன் (வயது 26).கட்டிட மேஸ்திரி .
இவர் தனது மோட்டார்சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். சிகரஅள்ளி என்ற இடைத்தருகே சென்றபோது ஒரு வளைவில் திடீரென வந்த பள்ளி வாகனம் ஒன்று லட்சுமணன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த லட்சுமணனை தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்ட லட்சுமணன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.