கடத்தூர் அருகே டிராக்டர் மோதி வாலிபர் படுகாயம்

புட்டிரெட்டிப்பட்டி ரெயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தார்.தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடத்தூர் அருகே  டிராக்டர் மோதி வாலிபர் படுகாயம்
Published on

கடத்தூர்

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த வேப்பிலைப்பட்டி பகுதி சேர்ந்த சௌந்தரராஜ் மகன் சக்தி.

இவர் கடத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது தாளநத்தம்- புட்டிரெட்டிப்பட்டி ரெயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த டிராக்டர் ஒன்று சக்தியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சக்திக்கு படுகாயம் ஏற்பட்டது,

உடனடியாக கடத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற சக்தி பின்பு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து சக்தி அளித்த புகாரின் பேரில் தலைமறைவாகியுள்ள டிராக்டர் ஓட்டுனர் மீது கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com