தருமபுரி அருகே அரசு பேருந்தின் படிக்கட்டு உடைந்து சாலையில் விழுந்த மாணவர்கள்

பள்ளி மாணவர்கள் படியில் நின்று கொண்டு பயணித்ததாக கூறப்படுகிறது.வேகத்தடையில் ஏறி இறங்கும் போது திடீரென பேருந்தின் கடைசி படிக்கட்டு உடைந்துள்ளது.
உடைந்த பஸ்சின் படிகட்டை படத்தில் காணலாம்.
உடைந்த பஸ்சின் படிகட்டை படத்தில் காணலாம்.
Published on

தொப்பூர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள சேலம்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலை சவுளூர் பேருந்து நிறுத்தம் அருகில் இன்று சிவாடி பகுதி கிராமத்திலிருந்து பள்ளி மாணவர்களை அரசு பஸ் ஏற்றிச்சென்றது.

இந்த அரசு பேருந்து எண்-2 காலையில் 8-46 மணிக்கு பள்ளி மாணவர்கள் படியில் நின்று கொண்டு பயணித்ததாக கூறப்படுகிறது.

அதனை அடுத்து பேருந்து சவுளூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும் போது திடீரென பேருந்தின் கடைசி படிக்கட்டு உடைந்துள்ளது.

அப்பொழுது படிக்கட்டில் பயணம் செய்த 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரோட்டில் விழுந்துள்ளனர்.

அதில் ஒரு பள்ளி மாணவனுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. அரசு பேருந்து மாணவர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென படிகட்டு உடைந்து விபத்துக்குள்ளானது மாணவர்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com