தருமபுரி அருகே லாரி மோதி கட்டிட மேஸ்திரி பலி

வரகூர் என்ற இடத்தருகே சென்றபோது அவ்வழியாக வந்த லாரி ஒன்று அவர்கள் மீது மோதியது.இந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தருமபுரி அருகே  லாரி மோதி கட்டிட மேஸ்திரி பலி
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் அள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). கட்டிட மேஸ்திரி. இவர்தன்னுடன் வேலை பார்க்கும் ராமகிருஷ்ணன் என்பவருடன் நேற்று இரவு வேலை முடிந்து மோட்டார்சைக்கிளில் ஊர் திரும்பினார்.

வரகூர் என்ற இடத்தருகே சென்றபோது அவ்வழியாக வந்த லாரி ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ராமகிருஷ்னன் படுகாயம் அடைந்தார்.அவரை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com