கடலூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

பல மாதங்களாக உடல்நிலை பாதிப்பு இருந்து வந்த காரணத்தினால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
கடலூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Published on

கடலூர் அடுத்த எஸ்.புதூரை சேர்ந்தவர் அருள் (வயது 40). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த பல மாதங்களாக உடல்நிலை பாதிப்பு இருந்து வந்த காரணத்தினால் மன உளைச்சலில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி நிலையில் இருந்தார். இதனை தொடர்ந்து அருளை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்த்தனர். ஆனால் அருள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: கடலூர் அடுத்த சின்ன குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 55). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று வீட்டு படியில் திடீரென்று வழுக்கி விழுந்ததால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த நிலையில் மாரியப்பன் வலி தாங்க முடியாத நிலையில் வீட்டில் தூக்கு போட்டு மயக்க நிலையில் இருந்தார். அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதனை செய்த டாக்டர் மாரியப்பன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com