கடலூர் அருகே விபத்தில் 2 பேர் காயம்

கடலூர் அடுத்த சின்ன கங்கணாங்குப்பம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையில் திரும்ப முயன்றார். பின்னால் மோட்டார் சைக்கிளில் கணபதி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கடலூர் அருகே விபத்தில் 2 பேர் காயம்
Published on

கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 42). கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று குருவிநத்ததிலிருந்து கடலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது கடலூர் அடுத்த சின்ன கங்கணாங்குப்பம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையில் திரும்ப முயன்றார்.

அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் கணபதி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பவீஷ்குமார், கணபதி 2 பேரும் காயம் அடைந்தனர். மேலும் 2பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்க்கப்பட்டனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com