சின்னசேலம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலி

வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் தோட்டப்பா டியில் இருந்து நைனார் பாளையத்திற்கு சென்றார். உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சின்னசேலம் அருகே  லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலி
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (வயது 54). மரம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் தோட்டப்பா டியில் இருந்து நைனார் பாளையத்திற்கு சென்றார். பின்னர் தோட்டப்பா டியில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல வி. கிருஷ்ணாபுரம் பால் சொசைட்டி அருகே வேப்பூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது முன்னால் கரும்பு லோடு ஏற்றி சென்ற லாரியின் பின்புறமாக வடமலை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலே வடமலை உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் வடமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com