சாமல்பட்டி அருகே மாணவி தற்கொலை செய்த வழக்கில் தந்தை-மகன் கைது

அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சாமல்பட்டி அருகே மாணவி தற்கொலை செய்த வழக்கில் தந்தை-மகன் கைது
Published on

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அடுத்துள்ள அத்திவீரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகள் சுவேதா. இவர் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி அன்று வீட்டில் சுவேதா எலி பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சுவே தாவை தற்கொலைக்கு தூண்டியதாக அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (வயது 67). அவரது மகன் வேலு (31) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com